லலித் கலா அகாதமி விருதுகள்
March 27 , 2019
1952 days
543
- 60-வது வருடாந்திர அகாதமி விருதுகளின் 15 வெற்றியாளர்களை லலித் கலா அகாதமி அறிவித்துள்ளது.
- 60-வது தேசிய கலைக் கண்காட்சியின் போது இந்த வெற்றியாளர்கள் விருது, சால்வை மற்றும் ரூ. 1 இலட்சம் நிதி ஆகியவை வழங்கி கௌரவிக்கப் படுவர்.
- அரசாங்கத்தினால் நுண் கலைகளுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது இதுவாகும்.
- லலித் கலா அகாதமியானது 1954 ஆம் ஆண்டில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது.
- இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
- இது தேசியக் கலை நிறுவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
- 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து லலித் கலா அகாதமியின் தலைவராக உத்தம் பச்சரன் செயல்படுவார்.
Post Views:
543