சீனாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கியின் அமெரிக்கப் பிரிவானது சமீபத்தில் பணய தீநிரல் தாக்குதலால் பாதிக்கப் பட்டது.
இந்தப் பணய தாக்குதலில் லாக்பிட் 3.0 என்ற பணய தீநிரல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
லாக்பிட் 3.0 ஆனது தனது தீநிரல்களை மறை செயல்பாட்டு வலை தளத்தில் விற்பனை செய்யும் லாக்பிட் என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
லாக்பிட் 3.0 என்பது, 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பதிவான அனைத்து தாக்குதல்களிலும் சுமார் 28 சதவிகித தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்த பணய தீநிரலின் மிகவும் பிரபலமான திரிபு ஆகும்.
பணய தீநிரல் என்பது நமது கோப்புகளுக்கான அணுகலைத் தடுக்கிறது அல்லது தாக்குதலை தொடங்கியவர்கள் கோரும் தொகையைச் செலுத்தும் வரை முக்கியத் தரவுகளை வெளியிடுவதாக மிகவும் அச்சுறுத்தும் வகையிலான தீங்கிழைக்கும் ஒரு மென்பொருளாகும்.