TNPSC Thervupettagam

லாரஸ் விருதுகள்

May 13 , 2023 433 days 313 0
  • லியோனல் மெஸ்ஸி, 2023 ஆம் ஆண்டின் லாரஸ் உலக விளையாட்டு வீரருக்கான விருதினை வென்றுள்ளார்.
  • ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டனுடன் 2020 ஆம் ஆண்டின் விருதைப் பகிர்ந்து கொண்டதையடுத்து, தற்போது மெஸ்ஸி இரண்டாவது முறையாக ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான இந்த விருதினை வென்றுள்ளார்.
  • ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் 2023 ஆம் ஆண்டின் லாரஸ் உலக விளையாட்டு வீராங்கனை விருதினை வென்றுள்ளார்.
  • இந்த விருதிற்காக ஆறாவது முறையாகப் பரிந்துரைக்கப்பட்ட இவர், முதல் முறையாக ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதினை வென்றுள்ளார்.
  • எலைன் தாம்சன்-ஹேராவுக்குப் பிறகு இந்த விருதினை வென்ற ஜமைக்கா நாட்டினைச் சேர்ந்த இரண்டாவது தடகள வீரர் ஃப்ரேசர்-பிரைஸ் ஆவார்.
  • சீன ஃப்ரீஸ்கியர் எலைன் கு இந்த ஆண்டின் அதிரடி விளையாட்டு வீரர் என்ற விருதினை வென்றுள்ளார்.
  • ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ் ஆண்டிற்கான சிறந்த திருப்புமுனை ஆட்டக்காரர் என்ற விருதை வென்றுள்ளார்.
  • சுவிட்சர்லாந்து நாட்டினைச் சேர்ந்த பாராலிம்பிக் சாம்பியனான சக்கர நாற்காலிப் பந்தய வீராங்கனை கேத்தரின் டெப்ரன்னர்,  ஆண்டின் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீராங்கனை என்ற விருதினை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்