2018 ஆம் ஆண்டிற்கான லாரியஸ் உலக விளையாட்டு வீரர் விருதை 20 முறை டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ரோஜர் பெடரர் வென்றுள்ளார்.
சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் இந்த விருதுகளை அதிகமுறைப் பெற்றவராவர் (ஆறு விருதுகள்).
செரீனா வில்லியம்ஸ், 23-வது கிராண்ட்ஸ்லாம்-ஐ வென்ற பிறகு தான் உலக விளையாட்டு வீரருக்கான விருதை 2017-இல் பெற்றார்.
பார்முலா 1 கன்ஸ்ட்ரக்டார்ஸ் சாம்பியன் மெர்செடிஸ் இந்த ஆண்டுக்கான அணி பட்டத்தையும் (Team of the year accolade), சக்கர நாற்காலி தடகள வீரர் மார்செல் ஹக் (Marcel Hug) இந்த ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கான விளையாட்டு வீரர் பட்டத்தையும் வென்றுள்ளனர்.
இந்த ஆண்டிற்கான திருப்புமுனை விருது (Breaking through of the year) – செர்ஜியோ கார்சியோ (கோல்ஃப்).
லாரியஸ் கழக விதிவிலக்கு சாதனை விருது - பிரான்செஸ்கோ டோட்டி.
பிரேசில் கால்பந்தாட்ட சங்கம் சேப்காயின்ஸ் (Chapecoense) இந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு கணத்திற்கான (Best Sporting moment of the year) விருதைப் பெற்றுள்ளது.
இந்த லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள், 1999-இல் நிறுவப்பட்டு விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிவருகிறது.
லாரியஸ் எனும் பெயர், லாரல் எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது. லாரல் என்பது தடகளத்தில் வெற்றியின் சின்னமாகும்.