TNPSC Thervupettagam

லாலா லஜ்பத் ராய் பிறந்த தினம் - ஜனவரி 28

January 30 , 2020 1704 days 571 0
  • சுதந்திரப் போராட்ட வீரரான லாலா லஜ்பத் ராயின் 155வது பிறந்த தினத்தை இந்தியா கொண்டாடியது.
  • இவரது தேசபக்தி இவருக்கு "பஞ்சாப் கேசரி" மற்றும் "பஞ்சாபின் சிங்கம்" போன்ற பட்டங்களைப் பெற்றுத் தந்தது.
  • இவர் 1865 ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று பஞ்சாபில் பிறந்தார்.
  • லால் பால் பால் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவில் இவரும் ஒருவராக இருந்தார்.
    • பஞ்சாப்பின் லாலா லஜ்பத் ராய், மகாராஷ்டிராவின் பால கங்காதர திலகர் மற்றும் வங்காளத்தின் பிபின் சந்திர பால் ஆகியோர் இந்த மூவர் குழுவில் இருந்தனர்.
  • இவர் இந்து சீர்திருத்த இயக்கங்கள், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கங்கள், இந்தியத் தேசியவாத இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரமாகப் பங்கேற்றார்.
  • இளைஞர்களான பகத்சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் லாலா லஜ்பத் ராயால் பெரிதும் ஈர்க்கப் பட்டனர்.
  • 1927 ஆம் ஆண்டில் சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் இவர் ஒரு முக்கியமானப் பங்கேற்பாளராக விளங்கினார்.
  • இவர் ஹிசார் சட்டக் கழகம், ஹிசார் ஆர்ய சமாஜ், ஹிசார் காங்கிரஸ், தேசிய டிஏவி நிர்வாகக் குழு போன்ற பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்