TNPSC Thervupettagam

லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது

October 11 , 2017 2603 days 910 0
  • 2017ஆம் ஆண்டின் கல்வி, மேலாண்மை, பொது நிர்வாகம் போன்றவற்றில் சிறந்து விளங்குவோருக்கான “18-வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதினை” டாக்டர் பிந்தேஸ்வர் பதாக் பெற்றுள்ளார். இவ்விருதினை குடியரசுத் தலைவர் அவருக்கு வழங்கி கவுரவித்தார்.
  • டாக்டர் பிந்தேஸ்வர் பதாக் , சுலாப் இண்டர்நேஷனல் (Sulabh International) எனும் சமூக சேவை அமைப்பினை நிறுவியுள்ளார். இவர் சுலாப் சவ்ச்சாலயா முறை (Sulabh Sauchalaya System) எனும் குறைந்த செலவுடைய, அனைவருக்கும் பொருத்தமான கழிவறை தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து இந்தியா முழுவதும் செயல்படுத்தி வருகிறார்.
  • மனிதக் கழிவுகளை மனிதர்களே கையாளும் (manual Scavenging) நடைமுறைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகளையும் ஆற்றிய பங்கினையும் அங்கீகரிக்கும் விதமாக நியூயார்க் நகர மேயர் ஏப்ரல் 14, 2016ஆம் தேதியை “சர்வதேச  டாக்டர் பிந்தேஷ்வர் தினமாக” அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இவர் 1991-ல் பத்ம பூஷண் விருதினையும் டாக்டர் பிந்தேஸ்வர் பதாக் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்