TNPSC Thervupettagam

லா கும்ப்ரே எரிமலை & நிலவாழ் பேரோந்திகள்

May 6 , 2024 74 days 165 0
  • பெர்னாண்டினா தீவில் அமைந்துள்ள லா கும்ப்ரே எரிமலை கடந்த மாதம் வெடித்தது.
  • ஈக்வடார் நிலப்பரப்பில் இருந்து 1,125 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லா கும்ப்ரே எரிமலையானது 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக வெடித்து உள்ளது.
  • இந்த தீவில் அரிய நிலவாழ் பேரோந்திகளும் (உடும்புகள்) அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
  • அவை எரிமலையின் பெரிய பள்ளம் அல்லது கால்டெராவின் விளிம்புப் பகுதிகளிலும், அதன் ஆழமான பகுதிகளிலும் கூடு கட்டி முட்டையிடுகின்றன.
  • இது இகுவானிடே குடும்பத்தினைச் சேர்ந்த மிகப் பெரியப் பல்லி இனமாகும்.
  • கேலபோகஸ் தீவுகளில் மட்டுமே காணப்படும் மூன்று நிலவாழ் உடும்பு வகைகளில் இதுவும் ஒன்றாகும்.
  • மற்றவை சாண்டா ஃபே நிலவாழ் உடும்பு மற்றும் கேலபோகஸ் இளஞ்சிவப்பு நிற நில வாழ் உடும்பு ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்