பசிபிக் பெருங்கடலில் தொடர்ந்து 2வது ஆண்டாக லா நினா என்ற வானிலை நிகழ்வு உருவாகியுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்தது.
லா நினா என்பது கடல்சார்ந்த மற்றும் வளிமண்டலம் சார்ந்த ஒரு நிகழ்வாகும்.
லா நினா காலத்தின் போது, மத்தியப் பசிபிக் பெருங்கடலின் கிழக்கு நில நடுக் கோட்டுப் பகுதி முழுவதும் கடல்பரப்பு வெப்பநிலையானது இயல்பைவிட 3 – 5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைவாக இருக்கும்.
லா நினா நிகழ்வின்போது, பொதுவாக அதிக வெப்பமண்டலப் புயல்கள், அதிக மழைப் பொழிவு மற்றும் நிலநடுக்கோட்டு பசிபிக் பெருங்கடலில் வெப்ப நிலை சராசரி வெப்ப நிலையை விட குளிர்ந்து காணப்படுதல் போன்ற நிகழ்வுகள் உருவாகும்.
இது எல் நினோ நிகழ்வின் குளிர்ச்சி மிகுந்த எதிர்வினை ஆகும்.
இது மிகப்பெரிய எல் நினோ – தெற்கு அலைவு என்ற பருவநிலை நிகழ்வின் ஒரு பகுதி ஆகும்.