TNPSC Thervupettagam
November 25 , 2021 970 days 823 0
  • பசிபிக் பெருங்கடலில் தொடர்ந்து 2வது ஆண்டாக லா நினா என்ற வானிலை நிகழ்வு உருவாகியுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்தது.
  • லா நினா என்பது கடல்சார்ந்த மற்றும் வளிமண்டலம் சார்ந்த ஒரு நிகழ்வாகும்.
  • லா நினா காலத்தின் போது, மத்தியப் பசிபிக் பெருங்கடலின் கிழக்கு நில நடுக் கோட்டுப் பகுதி முழுவதும் கடல்பரப்பு வெப்பநிலையானது இயல்பைவிட 3 – 5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைவாக இருக்கும்.
  • லா நினா நிகழ்வின்போது, பொதுவாக அதிக வெப்பமண்டலப் புயல்கள், அதிக மழைப் பொழிவு மற்றும் நிலநடுக்கோட்டு பசிபிக் பெருங்கடலில் வெப்ப நிலை சராசரி வெப்ப நிலையை விட குளிர்ந்து காணப்படுதல் போன்ற நிகழ்வுகள் உருவாகும்.
  • இது எல் நினோ  நிகழ்வின் குளிர்ச்சி மிகுந்த எதிர்வினை ஆகும்.
  • இது மிகப்பெரிய எல் நினோ – தெற்கு அலைவு என்ற பருவநிலை நிகழ்வின் ஒரு பகுதி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்