2022-23 ஆம் ஆண்டில் 22.480 மில்லியன் டன்களை (MT) உற்பத்தி செய்து லிக்னைட் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.
தற்காலிகப் புள்ளி விவரங்களின்படி, 2021-22 ஆம் ஆண்டில் 47.492 மெட்ரிக் டன்களாக இருந்த ஒட்டு மொத்த லிக்னைட் உற்பத்தி 2022-23 ஆம் ஆண்டில் 5.27% குறைந்து 44.990 மெட்ரிக் டன்னாக இருந்தது.
லிக்னைட் உற்பத்தியில் தமிழ்நாடு 49.97%, குஜராத் 27.37%, மற்றும் ராஜஸ்தான் 22.67% கொண்டுள்ளன.
இந்தியாவின் லிக்னைட் கையிருப்பு அளவான 40.9 பில்லியன் டன்னில் சுமார் 82% பங்கினை தமிழ்நாடு கொண்டுள்ளது.
இந்தியாவில் லிக்னைட் படிவுகள் முதன்மையாக தீபகற்பப் பகுதியின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் காணப்படும் மூன்றாம் நிலை வண்டல்களில் அமைந்துள்ளன.
ஒடிசா, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் லிக்னைட் சிறிய அளவில் கிடைக்கிறது.