உலகின் மிகவும் திறனுள்ள லித்தியம் – சல்பர் மின்கலனை (lithium-sulfur - Li-S) உருவாக்கியுள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு ஒரு திறன்பேசியை இயக்கும் திறன் கொண்டது. இந்த மின்கலத்தின் மூலம் ஒரு மின்சார மகிழுந்தை 1,000 கி.மீ தூரத்திற்குச் செலுத்த முடியும்.
Li-S மின்கலன்களின் குறைந்த உற்பத்தி செலவு, ஆற்றல் திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக லித்தியம் அயன் (லி-அயன்) மின்கலன்களுக்கு அடுத்த வந்த மின்கலன்களாக இவை கருதப்படுகின்றன.
சல்பர் அதிக அளவு கிடைப்பதால் இந்த வகை மின்கலன்களின் உற்பத்திச் செலவு மிகவும் குறைவாக உள்ளது.