சுரங்கத் துறை நடவடிக்கைகளில் இந்திய நிறுவனங்களுக்கு அணுகலை வழங்கச் செய்வதன் மூலமும், அதிக மதிப்புள்ள லித்தியம் மற்றும் கோபால்ட் ஏற்றுமதியை அனுமதிக்கச் செய்வதன் மூலமும், பல ஆப்பிரிக்க நாடுகள் இந்திய அரசினை அணுகி, அவற்றின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான கடன்களின் ஒரு பகுதியை வழங்கச் செய்வதற்காகப் பல சலுகைகளை வழங்குகின்றன.
இந்திய மேம்பாட்டு மற்றும் பொருளாதார உதவித் திட்டத்தின் (IDEAS) கீழ் சலுகைக் கடன் வழங்கீடு மூலம் மேம்பாட்டு உதவிகள் வழங்குவதை இந்தியா விரிவுபடுத்தச் செய்கிறது.
ஆப்பிரிக்காவில் எண்ணெய், எரிவாயு மற்றும் லித்தியம் ஆகியவற்றின் வளமான இருப்புகள் உள்ளன.
இப்போது லித்தியம்-அயனி மின்கல அடுக்குகளைப் பயன்படுத்தி மின்சார வாகன உள்கட்டமைப்பைக் கட்டமைக்கும் நாடுகளால் இது மிகவும் விரும்பப்படும் ஒரு கனிமமாக மாறியுள்ளது.