TNPSC Thervupettagam

லிப்டாக்கோ - கௌர்மா சாசனம்

September 21 , 2023 432 days 307 0
  • மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் நாடுகளின் இராணுவத் தலைவர்கள் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
  • லிப்டாக்கோ- கௌர்மா சாசனம் ஆனது சஹேல் அரசுகளின் கூட்டணியை (AES) நிறுவுகிறது.
  • இது அந்தப் பகுதியின் மக்களின் நலனுக்காக கூட்டுப் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர உதவியின் கட்டமைப்பை நிறுவுதல் ஆகும்.
  • மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் லிப்டாக்கோ - கௌர்மா பகுதியானது சமீபத்திய ஆண்டுகளில் ஜிஹாதிசக் கொள்கைகளால் சூறையாடப் பட்டது.
  • மூன்று நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பொருளாதார முன்னெடுப்புகளின் இணைப்பாக இந்தக் கூட்டணி அமையும்.
  • 2012 ஆம் ஆண்டில் வடக்கு மாலியில் வெடித்த ஜிஹாதி கிளர்ச்சியானது 2015 ஆம் ஆண்டில் நைஜர் மற்றும் புர்கினா பாசோ வரை பரவியது.
  • மூன்று நாடுகளும் 2020 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக் கவிழ்ப்புக்கு உட்பட்டுள்ளன.
  • சஹேல் என்பது ஆப்பிரிக்காவில் வடக்கே சஹாராவிற்கும் தெற்கே சூடானிய சவானாவிற்கும் இடையில் உள்ள மாறுநிலை சூழலியல் மற்றும் உயிர் புவியியல் மண்டலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்