லியோனர்டோ டாவின்சி வரைந்த ஒரு கரடி ஓவியமானது (தலைப்பகுதி) லண்டனில் நடைபெற்ற ஒரு ஏலத்தில் 8.8 மில்லியன் பவுண்டுக்கு (12.1 மில்லியன் டாலர்) ஏலம் போனது.
7 x 7 செ.மீ. அளவே உடைய இந்த ஓவியமானது 500 வருடத்திற்கும் மேல் பழமை மிக்கதாகும்.
2001 ஆம் ஆண்டில் 8.1 மில்லியன் பவுண்டுக்கு ஏலம் போன டாவின்சி வரைந்த குதிரை மற்றும் இயக்கியின் (குதிரை ஓட்டி) ஓவியத்தின் முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது.