TNPSC Thervupettagam

லில்லி சிங் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் நல்லெண்ணத் தூதராகத் தேர்வு

July 19 , 2017 2686 days 1097 0
  • நகைச்சுவை நடிகை , மற்றும் எழுத்தாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டுப் பெண்மணி லில்லி சிங், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (United Nations Children's Fund - UNICEF/ யுனிசெப்) புதிய நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இணையதள உலகில் "சூப்பர்வுமன்" என்று பிரபலமாக அழைக்கப்படும் லில்லி, இந்தியாவில் யுனிசெப் ஆதரவளிக்கும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை சந்தித்து உரையாடினர்.
  • குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி எடுத்துரைக்க லில்லி தனக்குரிய தனித்துவமான டிஜிட்டல் முன்னிலையைப் (Digital Presence) பயன்படுத்த இருக்கிறார் .
  • லில்லி , யூ-டியுப் உலகில் சுமார் மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பிரபலம் ஆவார். இவரது “How To Be A Bawse: A Guide to Conquering Life” என்ற புத்தகம் உலகப் புகழ் பெற்றது ஆகும்.
  • ஜூன் மாதம் ஃபோர்ப்ஸ் இதழ் பொழுதுபோக்கு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலை வெளியிட்டது . இதில் லில்லி சிங் முதல் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்