TNPSC Thervupettagam
August 12 , 2024 104 days 160 0
  • அறிவியலாளர்கள் டைட்டானியம்-50 என்ற கற்றையைப் பயன்படுத்தி மிகை எடை கொண்ட 116வது கூறினை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
  • லிவர்மோரியம் என்று பெயரிடப்பட்ட 116 கூறு ஆனது, தனிம வரிசையின் "மிகை எடை கொண்ட தனிமங்கள்" வகையின் ஒரு பகுதியாகும்.
  • இவை தனிம வரிசை அட்டவணையில் உள்ள அறியப்பட்ட தனிமங்களுக்கு அப்பாற் பட்ட மற்றும் மிகவும் நிலையற்ற தனிமங்கள் ஆகும்.
  • டைட்டானியம்-50 என்ற இந்த கற்றையானது அதன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • முன்னதாக கண்டறியப்பட்ட மிகை எடை கொண்ட தனிமங்கள் கால்சியம்-48 இன் வெவ்வேறு ஐசோடோப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன.
  • கூறுகளின் இணைவிற்கு மிக சாதகமான பண்புகளைக் கொண்டிருப்பதால் இது ஒரு "மாய" ஐசோடோப்பாகக் கருதப்படுகிறது.
  • டைட்டானியம்-50 ஐசோடோப்பின் அதி செறிவுக் கற்றையினை உருவாக்கும் செயல் முறையானது டைட்டானியம் உலோகத்தைச் சுமார் 3000 டிகிரி பாரன்ஹீட் வரையில் வெப்ப நிலையில் சூடாக்கும் ஒரு செயல் முறையினை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்