TNPSC Thervupettagam

லிவிங் பிளானட் அறிக்கை 2024

October 15 , 2024 39 days 143 0
  • லிவிங் பிளானட் அறிக்கை (2024) என்பது உலக வனவிலங்கு நிதியம் (WWF) என்ற பாதுகாப்பு அமைப்பினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மதிப்பீடாகும்.
  • 1970 ஆம் ஆண்டிலிருந்து கண்காணிக்கப்படும் வனவிலங்குகளின் சராசரி எண்ணிக்கை 73 சதவிகிதம் குறைந்துள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
  • சுமார் 35,000 வனவிலங்குகளின் எண்ணிக்கை மற்றும் 5,495 வகையான நீர் நில வாழ்விகள், பறவைகள், மீன்கள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன இனங்கள் ஆகியவை கணிசமாகக் குறைந்துள்ளன.
  • 1970 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 85 சதவீதம் சரிவுடன் நன்னீர் வாழ் இனங்கள் தான் மிகவும் பாதிக்கப்பட்ட இனங்களாக உள்ளன.
  • அதைத் தொடர்ந்து நிலவாழ் இனங்களில் 69 சதவீத சரிவும், கடல் வாழ் இனங்களின் எண்ணிக்கையில் 56 சதவீத சரிவும் பதிவாகியுள்ளது.
  • இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பகுதிகளில் உயிரினங்களின் எண்ணிக்கை 95 சதவீதம் குறைந்துள்ளது, அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவில் 76 சதவீதம் சரிவானது பதிவாகியுள்ளது.
  • ஆசியா-பசிபிக் பிராந்தியங்களில் ஒரு சேர 60 சதவீத சரிவானது பதிவாகியுள்ளது.
  • 1950 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் சினூக் சால்மன் மீன்களின் எண்ணிக்கை 88 சதவீதம் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்