TNPSC Thervupettagam

லீவிஸ் ஹாமில்டனின் 4-ஆவது சாம்பியன் பட்டம்

October 31 , 2017 2580 days 912 0
  • 2017 சீசன் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இதன்மூலம் ஃபார்முலா 1 வரலாற்றில் 4 பட்டங்கள் வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை  லீவிஸ் ஹாமில்டன் பெற்றுள்ளார்.
  • 2017 சீசனுக்கான ஃபார்முலா 1 கார் பந்தயம் மொத்தம் 20 சுற்றுகளைக் கொண்டதாகும். இதன் 18-ஆவது சுற்று மெக்ஸிகோ கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் மெக்ஸிகோ சிட்டியில் நடைபெற்றது.
  • 4-ஆவது முறையாக பட்டத்தை வென்றதன் மூலம் ஃபார்முலா 1 வரலாற்றில் அதிக பட்டங்கள் வென்றவர்கள் வரிசையில் வெட்டல், அலேன் பிராஸ்ட் ஆகியோருடன் இணைந்து 3-ஆவது இடத்தை ஹாமில்டன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
  • மைக்கேல் ஷூமாக்கர் 7 முறை பட்டம் வென்றதே இன்றளவும் சாதனையாக உள்ளது. அவருக்கு அடுத்தபடியாக அர்ஜென்டீனாவின் ஜூவான் மானுவேல் ஃபேங்கியோ 5 முறை பட்டங்கள் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்