கென்யா லெசர் உணவுப் புழு (மாவுப் புழு) லார்வாக்களை பாலிஸ்டைரீனை உண்டு அவற்றின் குடலில் உள்ள பாக்டீரியாக்களைக் கொண்டு அந்த நெகிழிப் பொருளைச் சிதைக்க உதவுகிறது.
லெசர் உணவுப் புழு என்பது அல்பிடோபியஸ் கரு வண்டுகளின் லார்வா வடிவமாகும்.
இந்தப் பாக்டீரியாக்கள் நெகிழிகளை ஜீரணிக்கக்கூடிய (சிதைக்கக் கூடிய) பல்வேறு நொதிகளை உற்பத்தி செய்கின்றன.
லார்வா ஆனது காலம் 8 முதல் 10 வாரங்கள் வரை நீடிக்கும்.
பாலிஸ்டைரீன் ஸ்டைரோஃபோம் என அழைக்கப்படுகிறது.
இது உணவு, மின்னணு மற்றும் தொழில்துறைச் சரக்குப் பொதிகளில் பரவலாகப் பயன்படுத்தப் படும் ஒரு நெகிழி பொருள் ஆகும்.