லெபனான் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாத் ஹரிரியை (Saad Hariri) மூன்றாவது முறையாக லெபனானின் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இம்மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் சாத் ஹரிரியின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இடங்களில் மூன்று பாகத்திற்கும் அதிகமான இடங்களை இழந்த போதிலும் மீண்டும் ஹரிரி பிரதமராக தனது பதவியை தக்க வைத்துள்ளார்.
அதிகாரப்பூர்வ கலந்தாலோசிப்பில் மொத்தம் 128 பாராளுமன்ற உறுப்பினர்களில் 111 உறுப்பினர்கள் ஹரிரிக்கு அதரவளித்ததனை அடுத்து அவர் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
லெபனான் நாட்டின் பிரிவினைவாத அதிகாரப் பகிர்வு முறைப்படி (Lebanon's sectarian power-sharing system), பிரதம அமைச்சர் பதவியானது சன்னி முஸ்லிம் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.