TNPSC Thervupettagam

லைரைடு விண்கல் பொழிவு

April 23 , 2021 1187 days 583 0
  • இது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் ஏற்படும்.
  • இந்த விண்கல் பொழிவின் பிரகாசமான பகுதி லைரா விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது.
  • விண்கல் பொழிவின் பிரகாசமான பகுதி  (radiant) என்பது விண்கற்கள் விழத் தொடங்கும் பாதையின் ஒரு புள்ளி  ஆகும்.
  • இது ஒரு நடுத்தர வலுவுடைய விண்கல் பொழிவு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இவை C/1861G1 தாட்சர் எனப்படும் ஒரு வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசுப்படலம் அல்லது குப்பைகளால் உருவாக்கப் படுகின்றன.
  • இதனை வட துருவத்திலிருந்து நன்கு பார்க்க இயலும்.
  • புவியானது வால்நட்சத்திரத்தின் பாதையைக் கடக்கும் போது இந்த விண்கல் பொழிவு ஏற்படும்.
  • புவியானது அதன் அருகில் செல்லும் போது வால்நட்சத்திரத்தின் (Comet) எஞ்சிய பகுதிகள் புவியின் ஈர்ப்பு சக்தியினால் ஈர்க்கப்படும்.
  • இவை புவியின் ஈர்ப்பு விசையினால் ஈர்க்கப் படுவதால் புவியை நோக்கி நகரத் தொடங்கும்.
  • அப்போது புவியின் வளிமண்டலத்தால் உருவாக்கப்படும் உராய்வின் காரணமாக அவை தீப்பற்றி எரியும்.
  • இந்த எரியும் எஞ்சிய பாறைகள் இரவு வானில் ஒரு ஒளிக்கற்றை போன்று தோற்றம் அளிக்கும்.
  • இவை விண்கல் பொழிவு எனப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்