TNPSC Thervupettagam

லோகமான்ய திலகர் தேசிய விருது 2023

August 3 , 2023 334 days 814 0
  • இந்தியப் பிரதமர் அவர்களுக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப் பட்டு உள்ளது.
  • இந்த விருதினைப் பெறும் 41வது நபர் இவர் ஆவார்.
  • இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் வாழ்வியல் மரபினைப் போற்றும் வகையில் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • இந்த விருதானது திலக் ஸ்மாரக் மந்திர் அறக்கட்டளையால் 1983 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
  • இது தேசத்தின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக நன்கு உழைத்தவர்களுக்கும், குறிப்பிடத் தக்க மற்றும் மகத்தானப் பங்களிப்பினை ஆற்றிய நபர்களுக்கும் வழங்கப் படுகிறது.
  • இந்த விருதானது ஒவ்வோர் ஆண்டும் பாலகங்காதர திலகர் அவர்களின் நினைவு நாளான ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று வழங்கப் படுகிறது.
  • கடந்த ஆண்டில், இந்தியாவின் “ஏவுகணைப் பெண்” என்று அழைக்கப்படும் மூத்த அறிவியலாளர் டெஸ்ஸி தாமஸுக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்