இந்திய லோக்பால் அமைப்பின் ஸ்தாபன தினம் ஆனது முதல் முறையாக ஜனவரி 16 ஆம் தேதியன்று புது டெல்லியில் உள்ள மானெக்சா மையத்தில் அனுசரிக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் சட்டத்தின் 3வது பிரிவின் படி, 16.01.2014 அன்று இந்திய லோக்பால் நிறுவப்பட்டது.
இது எந்தவொரு அரசியலமைப்பு அந்தஸ்தும் இல்லாத சட்டப்பூர்வ அமைப்பாகும்.
லோக்பால் ஒரு தலைவரையும் அதிகபட்சமாக 8 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
இதன் தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரினால் இதன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
லோக்பாலின் அதிகார வரம்பில் இந்தியாவின பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் A, B, C மற்றும் D பணிநிலை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்குவர்.