TNPSC Thervupettagam

லோக்பாலின் முதல் ஸ்தாபன தினம் - ஜனவரி 16

January 21 , 2025 6 hrs 0 min 55 0
  • இந்திய லோக்பால் அமைப்பின் ஸ்தாபன தினம் ஆனது முதல் முறையாக ஜனவரி 16 ஆம் தேதியன்று புது டெல்லியில் உள்ள மானெக்சா மையத்தில் அனுசரிக்கப்பட்டது.
  • 2013 ஆம் ஆண்டின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் சட்டத்தின் 3வது பிரிவின் படி, 16.01.2014 அன்று இந்திய லோக்பால் நிறுவப்பட்டது.
  • இது எந்தவொரு அரசியலமைப்பு அந்தஸ்தும் இல்லாத சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • லோக்பால் ஒரு தலைவரையும் அதிகபட்சமாக 8 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
  • இதன் தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரினால் இதன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
  • லோக்பாலின் அதிகார வரம்பில் இந்தியாவின பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் A, B, C மற்றும் D பணிநிலை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்