TNPSC Thervupettagam

லோக் ஆயுக்தா மசோதா – மகாராஷ்டிரா

January 1 , 2023 567 days 369 0
  • லோக் ஆயுக்தா மசோதாவினை நிறைவேற்றிய முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
  • ஊழலுக்கு எதிரான கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பின் கீழ் மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழு ஆகியவற்றினைக் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா லோக் ஆயுக்தா மற்றும் உப-லோகாயுக்தா என்ற சட்டமானது அம்மாநிலத்தில் தற்போது அமலில் உள்ளது.
  • தற்போதுள்ள சட்டத்தின்படி, ஊழல் தடுப்பு குறைதீர்ப்பாளர் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டுமே பரிந்துரைக்க முடியும்.
  • எனினும், இந்தப் புதியச் சட்டமானது, ஊழல் தொடர்பான வழக்கினை விசாரிக்குமாறு மாநில அரசு சார்ந்த முகமைகளுக்கு வலியுறுத்துவதற்கு லோக் ஆயுக்தா மற்றும் உப-லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்