லடாக்கில் நடைபெறும் லோசர் திருவிழாவானது திபெத்தியப் புத்த மதத்தின் ஒரு பாரம்பரிய அட்டவணையின் படி இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் கொண்டாடப் பட்டது.
இது லடாக் பகுதியிலுள்ள புத்தச் சமுதாயத்தினரால் கொண்டாடப்படுகிறது.
லோசர் என்பது திபெத்திய நாட்காட்டியிலுள்ள 11 மாதங்களின் முதல் நாளினுடைய தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் திபெத்திய சந்திர நாட்காட்டியின் முதல் நாள் தொடங்கி 15 நாட்கள் நடைபெறும் ஒரு திருவிழாவாகும்.
லோசர் என்பது புத்தாண்டு எனப் பொருள்படும் ஒரு திபெத்திய சொல் ஆகும்.
ஜே சோங்கபா என்பவருடைய (Je Tsongkhapa) பிறந்த நாள் மற்றும் அவர் முக்தி (நிர்வாணம்) அடைந்த தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதோடு இந்த விழாவானது தொடங்கியது.