காந்தி நகரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, லோதல் நகரில் கப்பல் துறை இருந்ததை உறுதிப்படுத்தும் புதிய ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.
ஹரப்பா நாகரிகத்தின் போது சபர்மதி ஆறு ஆனது லோதல் நகர் (தற்போது அந்த இடத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் பாய்கிறது) வழியாக ஓடியதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அகமதாபாத் நகரினை லோதல், நல் சரோவர் சதுப்பு நிலம் மற்றும் லிட்டில் ரான் வழியாக மற்றொரு ஹரப்பா தளமான தோலாவிராவுடன் இணைக்கும் ஒரு பயணப் பாதையும் இருந்தது.