TNPSC Thervupettagam

லோயா ஜிர்கா கூடுகை

August 12 , 2020 1475 days 633 0
  • கொலை செய்தல் மற்றும் கடத்துதல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்காக தண்டனை பெற்று வரும் 400 தாலிபான் தீவிரவாதிகளை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்வதற்காக 3 நாள் நடைபெறும் லோயா ஜிர்கா கூடுகையானது ஆப்கானிஸ்தானில் கூட்டப் பட்டுள்ளது.
  • இது ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு இன, மத மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய அளவிலான ஒரு தேசியக் கூடுகையாகும்.
  • இது தேசிய நெருக்கடி காலம் மற்றும் தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் கூட்டப்படும் உயரிய மதிப்பு கொண்ட ஒரு பழைமை வாய்ந்த ஆலோசக அமைப்பாகும்.
  • ஆப்கன் அரசியலமைப்பின் படி, லோயா ஜிர்கா ஆனது ஆப்கன் மக்களின் ஒரு உயரிய மதிப்பு மிக்க உணர்வாகக் கருதப்படுகின்றது.
  • ஆனாலும் இது ஒரு அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கும் அமைப்பு அல்ல. இதன் முடிவுகள் எந்தவொரு அமைப்பையும் கட்டுப்படுத்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்