வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 2019ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி 1,80,592 மெட்ரிக் டன்கள் எடையுள்ள சரக்குகளைக் கையாண்டு ஒரு புதிய சாதனையை படைத்திருக்கின்றது.
இது 2017 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று ஒரு நாளில் கையாளப்பட்ட 1,77,639 மெட்ரிக் டன்கள் என்ற முந்தையை சாதனையை முந்துகின்றது.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஜூலை 25ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சைப்ரஸ் நாட்டுக் கப்பலான “MVKMAX EMPEROR” வந்தடைந்த போது, 85,224 டன்கள் எடையுடன் அதிகபட்ச சரக்குகள் கொண்ட ஒரு கப்பலைக் கையாள்வது என்ற மற்றுமொரு சாதனையைப் படைத்திருந்தது.
இதற்கு முன்பு இத்துறைமுகத்தால் அதிகபட்ச சரக்கு அளவை கையாண்டக் கப்பலானது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதியன்று 84502 டன்கள் எடையுடன் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிக் கொண்டு வந்த “MV SFAKIA WAVE”என்ற கப்பலாகும்.