TNPSC Thervupettagam

வக்ஃப் வாரிய மசோதா 2024

August 12 , 2024 106 days 187 0
  • மத்திய அரசானது, வக்ஃப் (திருத்த) மசோதாவினை மக்களவையில் தாக்கல் செய்து உள்ளது.
  • இந்தச் சட்டம் ஆனது, ஒரு பொது தளத்தின் மூலம் வக்ஃப் சொத்துக்களுக்கான பதிவு செயல்முறையை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தற்போது நடைமுறையில் உள்ள 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தை மிக நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம் என மறுபெயரிட முயல்கிறது.
  • வக்ஃப் என்பது இஸ்லாமியச் சட்டத்தின்படி மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட சொத்துக்களுடன் தொடர்புடையதாகும்.
  • ஒரு சொத்து வக்ஃப் ஆக நியமிக்கப்பட்டால், அதனை ரத்து செய்ய முடியாது.
  • 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 9 லட்சம் ஏக்கர் நிலத்தை நிர்வகிக்கும் சுமார் 30 வக்ஃப் வாரியங்கள் உள்ளன.
  • வக்ஃப் வாரியங்கள் இரயில்வே துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமை கொண்ட அமைப்பாக உள்ளன.
  • மாநில வக்ஃப் வாரியங்களுடன் சேர்த்து மத்திய வக்ஃப் சபையினை அமைக்க இந்த மசோதா முன்மொழிகிறது.
  • குறிப்பிடத்தக்க வகையில், இந்த அமைப்புகளில் முஸ்லீம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களும் பிரதிநிதித்துவம் பெறுவர்.
  • இதில் அனைத்து மாநில வாரியங்கள் மற்றும் மத்திய சபையில் இரண்டு பெண்களை நியமிப்பதற்கான விதிமுறையும் இடம் பெற உள்ளது.
  • இது ஒரு சொத்து வக்ஃப் அல்லது அரசு நிலம் என வகைப்படுத்தப் பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்கும் முதன்மை அதிகாரியாக மாவட்ட ஆட்சியரை நியமிக்கிறது.
  • இது வக்ஃப் தீர்ப்பாயத்திடம் உள்ள அந்த பொறுப்பை வேறொரு அமைப்பிற்கு கை மாற்றுகிறது.
  • வக்ஃப் வாரியங்களுக்குள் ஷியாக்கள், சன்னிகள், போஹ்ராக்கள் மற்றும் அககானிகளுக்கு பிரதிநிதித்துவத்தை நன்கு உறுதி செய்யும் வகையில், குறிப்பாக போஹாராக்கள் மற்றும் அககானிகளுக்காக என்று ஒரு தனி அவுகாஃப் வாரியத்தை உருவாக்குவதை அந்தச் சட்டம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்