TNPSC Thervupettagam

வங்கதேசத்தின் முதல் அணு உலை

September 21 , 2017 2672 days 915 0
  • வங்கதேசத்தின் ரோப்பூர் அணுசக்தி உலையை அமைக்க இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டிணைவை ஏற்படுத்தியுள்ளன.
  • இது இந்தியா-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் மூன்றாவது நாட்டில் மேற்கொள்ளப்படும் முதல் அணுசக்தி திட்டம் ஆகும்.
  • மேலும் இது இந்தியாவின் முதல் வெளிநாட்டு அணுசக்தி கட்டமைப்பு முனைவாகும்.
  • ரோப்பூர் அணு உலைத் திட்டமானது வங்கதேசத்தின் முதல் அணுசக்தி திட்டம் ஆகும்.
  • இது ரஷ்யாவின் உதவியோடு வங்கதேசத் தலைநகர் டாக்காவிற்கு அருகே கட்டப்படவுள்ளது.
  • ரோப்பூர் அணுசக்தி கூடத்தின் இரண்டு உலைகளும் பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தானை அடுத்து தென் ஆசிய நாடுகளில் அணுசக்தியை ஆற்றல் உற்பத்திக்காக பயன்படுத்தும் மூன்றாவது நாடக வங்கதேசம் உருவாகும் .
  • ரோப்பூர் அணுசக்தி கூடத்தின் திறன் – 2 * 1200 மெகா வாட்கள் (Mega Watt)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்