இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்ஸிம் (Export Import Bank - Exim Bank) வங்கி வங்கதேசத்திற்கு அதன் சமூக மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு (29,200 கோடிகள்) கடன் அளிக்க உள்ளது.
இந்த வகையில், எக்ஸிம் வங்கி அக்டோபர் (2017) மாதம், இந்திய அரசு சார்பாக வங்கதேச அரசோடு கடன் வசதியை அதிகரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
எக்ஸிம் வங்கி இந்தியாவிலிருந்து வெளிநாட்டு வாணிபத்தை ஊக்குவிப்பதற்காக நிதி வசதி அளிக்கும் இந்திய அரசுக்கு முழுவதும் சொந்தமான ஒரு நிறுவனம் ஆகும். 1982ல் ஏற்படுத்தப்பட்ட இந்த நிறுவனத்தின் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது.
இந்த வங்கி கடன் வசதியை வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், வட்டார வளர்ச்சி வங்கிகள், இறையாண்மையுடைய அரசுகள் ஆகியவற்றுக்கு விரிவுபடுத்தும்.