வங்காளதேசத்தின் மத்திய வங்கியானது, அந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக சந்தை விநியோகம் மற்றும் தேவை அடிப்படையில் பண மதிப்பு நிர்ணயம் செய்ய அனுமதித்துள்ளது.
4.7 பில்லியன் டாலர் கடன் திட்டத்தில் இருந்து அதிகப்படியான பணத்தைப் பெறச் செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வழங்கப்பட்ட கோரிக்கைகளின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.
இந்த ஆண்டு பாகிஸ்தான், எகிப்து மற்றும் லெபனான் ஆகியவை தங்கள் நிலையான பணப் பரிமாற்று விகிதங்களைக் குறைத்துள்ளன.
ஒரு மாறுநிலைப் பண பரிமாற்று விகிதம் என்பது ஒரு நாட்டின் நாணய மதிப்பானது மற்ற நாணயங்களுடன் ஒப்பிடப்படும் போது, சந்தை விநியோகம் மற்றும் தேவை அடிப்படையில் அந்நியச் செலாவணிச் சந்தையினால் நிர்ணயிக்கப்படும் ஒரு முறை ஆகும்.
ஒரு நிலையான பணப் பரிமாற்று விகிதத்திற்கு முரணான இந்த விகிதத்தில் அரசு என்பது முழுமையாக அல்லது பெருமளவில் இந்த விகிதத்தைத் தீர்மானிக்கிறது.