TNPSC Thervupettagam
May 11 , 2020 1533 days 801 0
  • 2019/20 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின் படி சுந்தர வனக்காடுகளில் ராயல் வங்காளப் புலிகளின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளதாக மேற்கு வங்க வனத்துறை அறிவித்துள்ளது.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் கீழ், ராயல் வங்காளப் புலிகளானது அழிந்து வரும் உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 4,262 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள சுந்தரவனக் காடுகளில் சதுப்புநிலப் பகுதி மட்டும் 2,125 சதுர கி.மீ ஆகும்.
  • இது உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு மற்றும் தெற்காசியாவின் மிகவும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.
  • இது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 
  • சுந்தரவனக் காடுகள் வங்கப் புலிகளின் தாயகமும் ஆகும்.
  • இந்தியாவின் மொத்த அலையாத்தி (மாங்குரோவ்) காடுகளின் பரப்பில் இந்தியாவின் சுந்தரவனக் காடுகள் மட்டும் 60 சதவிகித பரப்பைக் கொண்டுள்ளன.
  • இது இந்தியாவின் 27வது ராம்சார் தளமாகும்.
  • இது இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட ஈரநிலமாகும் (4,23,000 ஹெக்டர்கள்).
  • இது மிகவும் வெகுவாக அருகிவரும் வடக்கு நதி வகை ஆமை, அருகிவரும் ஐராவதி டால்பின் மற்றும் பாதிக்கப்படக் கூடிய வேட்டையாடும் பூனை போன்ற அதிக அளவிலான, அரிதான மற்றும் உலகளவில் ஆபத்துக்குள்ளான உயிரினங்களுக்கான புகலிடமும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்