வங்காள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
January 17 , 2024
346 days
334
- மேற்கு வங்காள மாநில அரசானது, வங்காள மொழியை அதிகாரப்பூர்வமாக "செம்மொழி" ஆகப் பட்டியலிடுமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளது.
- அம்மாநில அரசின் கோரிக்கைப்படி, வங்காளம் ஒரு மொழியாக, எழுத்துப் பூர்வமாக கி.மு. 3-4 ஆம் ஆண்டிலிருந்தே காணப்படுகிறது.
- வங்காள மொழி இந்தியாவில் அதிகம் பேசப்படும் 2வது மொழியாகும் என்பதோடு இது உலகில் அதிகம் பேசப்படும் 7வது மொழியும் ஆகும்.
- இதுவரை, ஆறு மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து உள்ளதாக இந்திய அரசு அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
- அவை தமிழ் (2004), சமஸ்கிருதம் (2005), தெலுங்கு, கன்னடம் (2008), மலையாளம் (2013), மற்றும் ஒடியா (2014) ஆகியவை ஆகும்.
- மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு மொழியை "செம்மொழி" என்று அறிவிப்பதற்கு அது பின்வரும் நிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதன் பண்டைய நூல்களின் அதீதத் தொன்மை;
- 1500-2000 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படுவதற்கான வரலாறு;
- ஒரு மொழி பேசும் குழுவின் தலைமுறைகளால் மதிப்புமிக்க பாரம்பரியமாகக் கருதப் படுகின்ற பண்டைய இலக்கியங்கள்/நூல்களின் தொகுப்பினை கொண்டு இருக்க வேண்டும்;
- அசலாகவும் மற்றொரு மொழி பேசும் சமூகத்திலிருந்து பெறப்படாத ஒரு இலக்கிய பாரம்பரியத்தினை கொண்டிருக்க வேண்டும்; மற்றும்
- செம்மொழிக்கும் அதன் பிற்கால வடிவங்களுக்கும் அல்லது அதன் கிளைகளுக்கும் இடையில் எந்தவொரு இடைவெளியும் இல்லாமல், நவீன காலத்திலிருந்து வேறுபட்டு இருப்பது.
Post Views:
334