மத்திய அரசானது அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றை இணைத்து இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியை உருவாக்க முன்மொழிந்துள்ளது.
புதிதாக இணைக்கப்பட்ட நிறுவனமானது ரூ.14.82 லட்சம் கோடி மொத்த வர்த்தகத்துடன் நாட்டில் SBI மற்றும் HDFC வங்கிகளுக்கு அடுத்து 3 வது மிகப்பெரிய வங்கியாக இருக்கும்.
இந்த இணைப்பானது கீழ்க்காண்பனவற்றின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான குழுவால் முன்மொழியப்பட்ட மாற்று வழிமுறை.
பொதுத்துறை வங்கியல் துறையில் சீர்திருத்தங்கள்.
இந்த இணைப்பால் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையானது 19 ஆக குறையும்.