2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, வங்கிக் கடனில் தமிழ் நாட்டில் உள்ள பெண்களின் பங்கு 20.78% ஆக உள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அனைத்து வங்கிகளாலும் பெண்களுக்கு வழங்கப்பட்ட தமிழ்நாட்டின் கடன் தொகை 2,04,737.54 கோடி ரூபாயாக உள்ளது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள அசல் தொகை 3,08,221.32 கோடி ரூபாயாக இருந்தது.
கல்விக் கடன், நுகர்வோர் கடன், வணிகக் கடன் மற்றும் பெண்களுக்கான சொத்துக் கடன் ஆகியவற்றில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.
வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் கடன் அட்டை ஆகியவற்றின் அடிப்படையில் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது.