அரசாங்கம் ஆனது 2024 ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதாவினை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு வங்கிக் கணக்கிற்கு வாரிசுதாரர்களாக நியமிப்பதற்கான விருப்பத் தேர்வு எண்ணிக்கையினை ஒன்றிலிருந்து நான்கு என்ற அளவாக அதிகரிக்க இந்த மசோதா முயல்கிறது.
உரிமை கோரப்படாத முதலீட்டாளர்கள் பங்குத் தொகைகள், பங்குகள், வட்டி அல்லது பத்திரங்களை மீட்டெடுப்பது ஆகியவற்றின் ஒதுக்கீடுகளை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியம் (IEPF) மேற்கொள்ள இந்த மசோதா பரிந்துரைக்கிறது.
இது இயக்குநர் பதவிகளுக்கான 'கணிசமான வட்டி' அளவினை மறுவரையறை செய்கிறது என்பதோடு இது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய்க்குப் பதிலாக 2 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.
ஒழுங்குமுறை இணக்கத்திற்கான வங்கிகளின் அறிக்கையிடல் தேதிகளை இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் கடைசி நாளன்று நிர்ணயிப்பதற்கும் இந்த மசோதா முயல்கிறது.
இந்த மசோதா பின்வருவனவற்றில் திருத்தம் மேற்கொள்ள முன்மொழிகிறது;
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934,
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949,
பாரத ஸ்டேட் வங்கி சட்டம், 1955,
வங்கி நிறுவனங்கள் (பங்கீடுகளைக் கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றுதல்) சட்டம், 1970 மற்றும்
வங்கி நிறுவனங்கள் (பங்கீடுகளைக் கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றுதல்) சட்டம், 1980.