TNPSC Thervupettagam

வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024

December 9 , 2024 20 days 88 0
  • மக்களவையானது 2024 ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளில் நான்கு வாரிசுதாரர்கள் வரை வைத்திருக்க இந்த மசோதா அனுமதிக்கிறது.
  • நிறுவனங்களின் இயக்குனர் பதவிகளுக்கான "பலன் சார் வட்டியை" மறுவரையறை செய்வது தொடர்பான மாற்றங்களையும் இது முன்மொழிவதோடு, இது தற்போதுள்ள 5 லட்சம் ரூபாய் என்ற வரம்பினை 2 கோடி ரூபாயாக அதிகரிக்க உள்ளது.
  • கூட்டுறவு வங்கிகளில் உள்ள இயக்குநர்களின் (தலைவர் மற்றும் முழு நேர இயக்குநர் நீங்கலாக) பதவிக் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க இந்த மசோதா முன்மொழிகிறது.
  • மத்தியக் கூட்டுறவு வங்கியின் இயக்குனர், மாநிலக் கூட்டுறவு வங்கியின் வாரியத்தில் பணியாற்ற இந்த மசோதா அனுமதிக்கும்.
  • சட்டப்பூர்வத் தணிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைத் தீர்மானிப்பதில் வங்கிகளுக்கு அதிகச் சுதந்திரத்தை வழங்கவும் இந்த மசோதா முயல்கிறது.
  • இது ஒழுங்குமுறை இணக்கத்திற்காக வங்கிகளுக்கான அறிக்கையிடல் தேதிகளை  இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக் கிழமைகளுக்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் அம்மாதத்தின் கடைசி நாளன்று நிர்ணயிக்க உள்ளது.
  • இந்த மசோதாவானது பின்வரும் ஐந்து சட்டங்களை திருத்துவதற்காக முன்மொழியப் பட்டு உள்ளது. அவை
    • இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934,
    • வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (அல்லது BR சட்டம்),
    • பாரத ஸ்டேட் வங்கி சட்டம், 1955,
    • வங்கி நிறுவனங்கள் (பங்கீடுகளைக் கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றுதல்) சட்டம், 1970, மற்றும்
    • வங்கி நிறுவனங்கள் (பங்கீடுகளைக் கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றுதல்) சட்டம், 1980.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்