மத்திய அரசானது அக்டோபர் 21 ஆம் தேதி வரை வங்கித் தொழிற்துறையைப் ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாக அறிவித்துள்ளது.
இந்த உத்தரவானது தொழிற் தகராறுச் சட்டம், 1947 என்ற சட்டத்தின் விதிகளின் கீழ் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் இந்தியத் தொழிற்துறையின் பணிக் கலாச்சாரத்தில் நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் காப்பதாகும்.
இந்தச் சட்டமானது அமைப்புசார் துறைக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த உத்தரவானது மத்திய நிதித்துறை அமைச்சகத்தினால் பிறப்பிக்கப்பட்டு, அதன் பிறகு அது குறித்த ஒரு தெளிவிற்காக இந்திய ரிசர்வ் வங்கிக்குச் செல்ல இருக்கின்றது.
இந்த உத்தரவானது மத்தியத் தொழிலாளர் துறை அமைச்கத்தினால் நிறைவேற்றப்பட்டுச் செயல்படுத்தப் படுகின்றது. a