2022 ஆம் நிதியாண்டில் ₹20, ₹50, ₹100 மற்றும் ₹200 ஆகிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் விற்பனை விலையானது உயர்ந்துள்ளது.
இருப்பினும், ₹500 மதிப்பிலான நோட்டுகளின் விலை மாறாமல் உள்ளது.
2016-17 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய உயர்விற்குப் பிறகு 2022 ஆம் நிதி ஆண்டில் நாணயத்தை அச்சிடுவதற்கு ஆகும் ஒட்டு மொத்தச் செலவானது இரண்டாவது மிக உயர்ந்ததாகும்.
1,000 எண்ணிக்கையிலான 50 ரூபாய் நோட்டுகளின் விற்பனை விலையானது 2021 ஆம் நிதியாண்டை விட 2022 ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக 23 சதவீதம் அதிகரித்து உள்ளது.
20 ரூபாய் நோட்டுகளின் விற்பனை விலையானது குறைந்த அளவான 1 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.