இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேசப் பிரதமர் திருமதி.ஷேக் ஹசீனா ஆகியோர் மேற்குவங்க மாநிலத்தின் சாந்தி நிகேதனில் உள்ள விஷ்வபாரதி பல்கலைக்கழகத்தில் வங்கதேச இல்லத்தை தொடங்கி வைத்தனர்.
சாந்திநிகேதனில் உள்ள வங்கதேச இல்லமானது, அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தைக் கொண்டிருப்பதோடு நான்கு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் சாந்திநிகேதனில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகமான விஷ்வபாரதி, இரவீந்திரநாத் தாகூரால் 23 டிசம்பர் 1921ல் நிறுவப்பட்டது. தாகூரால் இந்த மத்தியப் பல்கலைக்கழகம் விஷ்வபாரதி என அழைக்கப்பட்டது. விஷ்வ பாரதி என்பதன் பொருள் இந்தியாவுடனான உலகின் தொடர்பு என்பதாகும் .
இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் இந்தியப் பிரதமர் ஆவார்.