சார்புரிமை ஆவணம் வைத்திருப்பவர் தனது தனிப்பட்ட அறிவில் அவருக்குத் தெரிந்த உண்மைகளைப் பற்றி மட்டுமே வெளியிட முடியும் என்றும் அவருக்குத் தெரியாத உண்மைகளைப் பற்றி அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது.
1882 ஆம் ஆண்டு இந்திய வசதியுரிமைச் சட்டத்தின் கீழ் வசதியாக்கல் கருத்தாக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன் படி, ஒரு வசதியுரிமை என்பது தனது சொந்த நிலம் அல்லாது மற்றொரு நிலத்தின் மீது நில உரிமையாளர் அல்லது நில வசிப்பவர் கொண்டுள்ள உரிமை ஆகும் என்பதோடு இது ஒரு நிலத்தை நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்தச் செய்வதற்காக வழங்கப்படுகிறது.
இந்த உரிமை இல்லாமல் ஓர் ஆக்கிரமிப்பாளர் அல்லது உரிமையாளர் தனது சொந்த சொத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது என்பதால் இந்த உரிமை வழங்கப் படுகிறது.
தனது சொந்த நிலத்தைப் பயன்படுத்துவதற்காக, தனக்குச் சொந்தமில்லாத வேறு ஒரு நிலம் தொடர்பான அல்லது சம்பந்தமான எந்த நடவடிக்கையையாவது தொடர்ந்து செய்ய அல்லது தடுக்க அல்லது தொடர்ந்து தடுக்கும் உரிமையும் இதில் அடங்கும்.