இந்த நாள் ஆனது வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் வசந்த கால சம இரவு பகல் நாளின் தொடக்கத்துடன் தெற்கு அரைக்கோளத்தில் இள வேனிற் காலத்தின் தொடக்கத்தினையும் குறிக்கிறது.
இந்த நாளில், சூரியன் ஆனது நண்பகலில் நிலநடுக்கோட்டுக்கு மிகவும் நேர் எதிராக உச்சியில் தோன்றும்.
சம இரவு பகல் நாளானது, ஒரு ஆண்டிற்கு இரண்டு முறை என அதாவது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிகழ்கின்றன என்பதோடு மேலும் இரு துருவங்களும் ஒரே நேரத்தில் சூரிய ஒளி பெறும் கால கட்டம் இதுவாகும்.
வடக்கு அரைக்கோளத்தில், வசந்த கால அல்லது இளவேனிற் கால சம இரவு நாள் ஆனது பொதுவாக மார்ச் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளுக்கு இடையில் நிகழ்கிறது.
இலையுதிர் கால சம இரவு நாளானது செப்டம்பர் 21 மற்றும் 24 ஆகிய தேதிகளுக்கு இடையில் நிகழ்கிறது.
சம இரவு பகல் நாள் என்பது, ஒரு ஆண்டில் பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டும் சம கால நீளத்தில் இருக்கும் நேரத்தைப் பிரதிபலிக்கிறது.
சம இரவு பகல் நேரத்தில், பூமியின் அச்சு மற்றும் சுற்றுப்பாதை ஆகியவை இரண்டு அரைக் கோளங்களும் சம அளவு சூரிய ஒளியைப் பெறும் வகையில் அமைகின்றன.