TNPSC Thervupettagam
December 1 , 2017 2549 days 880 0
  • வசாங் – 15 எனும் பெயருடைய கண்டங்களுக்கு இடையிலான அணுஆயுத ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • அமெரிக்காவின் அனைத்து பிரதான பகுதிகளையும் தாக்கவல்ல திறனுடைய மாபெரும் கன அணு ஆயுதங்கள் உடைய கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையே வசாங்-15 ஆகும்.
  • அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையே பகைமூட்டம் நிலவி வரும் இவ்வேளையில் இது இந்த ஆண்டில் வடகொரியாவின் 20-வது ஏவுகணையாகும். மேலும் இது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ள மூன்றாவது கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையாகும்.
  • முதல் முறையாக பியாங் யாங் மாகாணத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை பல்லாயிரம் மைல்களை தாண்டி ஜப்பானிய கடல் பகுதியில் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EEZ-Exclusive Econimic Zone) இருந்த இலக்கைத் தாக்கி அழித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்