ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளாக கடலோரப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த வஜ்ரா பாதுகாப்புக் கப்பல் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது.
இந்தக் கப்பல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
கடவுள் இந்திரனின் ஆயுதமான “வஜ்ரா” இதற்கு பெயராக சூட்டப்பட்டுள்ளது.
இது மசாகான் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டு 1988-ல் கடலோரக் காவல் படையில் சேர்க்கப்பட்டது.
ஏப்ரல் 11, 2013-ல் பாரதீப் கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டது.