வடகிழக்கு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் பதிப்பு மணிப்பூரின் இம்பாலில் நடைபெற்றது.
மணிப்பூர் 80 தங்கம், 48 வெள்ளி மற்றும் 31 வெண்கலப் பதக்கங்கள் சேர்த்து மொத்தமாக 159 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியனாக மூடிசூட்டப்பட்டது.
அசாம் 140 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், அருணாச்சலப் பிரதேசம் 76 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றின.
வடகிழக்கு ஒலிம்பிக் விளையாட்டுகள் 2018 ஆனது வடகிழக்கு ஒலிம்பிக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் மணிப்பூர் ஒலிம்பிக் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகளின் 2வது பதிப்பு 2019 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெறும்.