மத்திய அமைச்சரவை உள்துறை அமைச்சரை வடகிழக்கு சபையின் அலுவல் வழித் தலைவராக நியமிப்பதற்கான வடகிழக்குப் பிராந்திய முன்னேற்றத்துறை அமைச்சரகத்தின் பரிந்துரையினை ஏற்றுக் கொண்டுள்ளது.
வடகிழக்கு சபை அனைத்து எட்டு வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர் மற்றும் முதலமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சட்டரீதியான அமைப்பாகும்.
வடகிழக்குப் பகுதி அமைச்சரகத்தின் மத்திய இணை அமைச்சர் இந்த சபையின் துணைத் தலைவராகப் பணியாற்றுவார்.
வடகிழக்கு சபை என்பது வடகிழக்கு சபை சட்டம் 1971-ன் கீழ் சமச்சீரான மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தினை பாதுகாப்பதற்கும் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்திசைவினை வழிவகுப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு உச்சநிலை அமைப்பாகும்.