TNPSC Thervupettagam

வடகிழக்கு சிறப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

December 17 , 2017 2566 days 1371 0
  • 2017-2018ல் இருந்து வடகிழக்கு சிறப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (North East Special Infrastructure Development Scheme) என்னும் புதிய மத்திய துறைத் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டம், மார்ச் 2020 வரை குறிப்பிட்ட துறைகளின் உட்கட்டமைப்பு உருவாக்கத்தில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முழு நிதியும் மத்திய அரசால் அளிக்கப்படும்.
  • இந்த NESIDS திட்டமானது பின்வரும் துறைகளின் கீழ் உட்கட்டமைப்பை உருவாக்கும்.
  • நீர் வழங்கல், மின்சாரம், இணைப்பு மற்றும் குறிப்பாக சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்கள் தொடர்பான உட்கட்டமைப்பு,
  • கல்வி மற்றும் சுகாதாரப் பிரிவுகளின் சமூகத் துறைகளினுடைய கட்டமைப்பு.
  • புதிய திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்கள் இப்பகுதியில் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி வசதிகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சுற்றுலாவை ஊக்குவித்து அதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
தாமதமாகாத மத்திய வளங்களின் தொகுப்புத் திட்டம் (NLCPR)
  • 2020 ஆண்டு மார்ச் மாதம் வரை தற்போது உள்ள “தாமதமாகாத மத்திய வளங்களின் தொகுப்புத் திட்டத்தின் (Non-Lapsable Central Pool of Resources - NLCPR) தொடர்ச்சியை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
  • திட்டத்தின் நிதியை மொத்த ஒதுக்கீடான 5300 கோடிகளில் 90:10 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அளிக்கும். இந்தத் திட்டமானது தற்போது நடைபெறும் திட்டங்களை விரைவுபடுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகமானது NLCPRல் இருந்து பல்வேறு வடகிழக்கு மாநிலங்களின் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நிதியை ஒதுக்கீடு செய்கிறது.
  • அமைச்சகமானது, NLCPR (மாநிலம்) மற்றும் NLCPR (மத்தியம்) என்ற இரண்டு திட்டத்தின் கீழ் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. அதற்கான வருடாந்திர வரவு செலவு ஒதுக்கீடுகளானது சாதாரண வரவு செலவு செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்