TNPSC Thervupettagam

வடகிழக்கு துணிகர நிதி

February 20 , 2018 2472 days 744 0
  • வளரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான விரும்பத்தகு மையமாக வடகிழக்கு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் வடகிழக்கு துணிகர நிதியின் (Northeast Venture Fund) பயன்களை பெறுவதற்காக நாடு முழுவதும் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Development of Northeast Region – DoNER) அழைப்பு விடுத்துள்ளது.
  • வடகிழக்கு நிதி மேம்பாட்டுக் கழக நிறுவனத்தினால் (North Eastern Development Finance Corporation Ltd - NEDFi) இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டது.
  • வடகிழக்கு துணிகர நிதியமானது வடகிழக்கு பிராந்தியத்திற்கென ஏற்படுத்தப்பட்ட முதல் துணிகர மூலதன நிதியாகும்.
  • வடகிழக்கு துணிகர நிதியானது வடகிழக்கு பிராந்தியத்தில் தொழில் முனைவுத் தன்மையை (Entrepreneurship) ஊக்குவிப்பதற்காகவும், முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு நிதியியல் ஆதரவை வழங்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்